வெள்ளத்தை கண்காணிக்கவும் அதை தடுக்கவும் தமிழக அரசின் சார்பில் ஆளில்லா விமான சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை துறை , அண்ணா பல்கலைக்கழகத்தின் டாக்டர் அப்துல் கலாம் ஆளில்லா விமான ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து சென்னையில் முதன் முறையாக 3 ஆளில்லா விமான குழுக்களை ஏற்படுத்தியுள்ளது.
10 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் வகையிலும் தொடர்ந்து 80 நிமிடங்கள் பறக்கும் வகையிலும் இந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உயர பறக்கும் இந்த விமானங்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவு செய்து கொண்டுவரும் புகைப்படம் மற்றும் நேரடி காட்சிகளை ஒப்பிட்டு, அதன் அடிப்படையில் அதிக வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.