சென்னை அசோக் நகரில் இருந்து நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரையிலான சாலையின் கீழே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது .
இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் சிக்கியது. போக்குவரத்துக்கு பயன்பாடற்ற சாலை என்பதால் பெரிய அளவிலான விபத்துக்கள் எதுவும் நடக்கவில்லை.
இந்த சாலையின் கீழே செல்லும் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் சாலையில் அவ்வப்போது பள்ளம் ஏற்படுவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் புகார் தெரிவித்தனர்.