தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் உருவாகும் பட்டாசு கழிவுகள் 33 தனி வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் பாதுகாப்பாக அழிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தீபாவளியையொட்டி சேரும் பட்டாசு கழிவுகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள வேஸ்ட் மேனேஜ்மென்ட் லிமிடெட் நிலையத்தில் பாதுகாப்பாக அழிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.