சென்னையில் கோயம்பேடு, வேளச்சேரியில் கட்டப்பட்ட புதிய மேம்பாலங்களை வரும் 1-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேளச்சேரியில் இரண்டடுக்கு மேம்பாலப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதன் ஒரு வழித்தடம் திறக்கப்பட உள்ளது. 108 கோடி ரூபாய் செலவில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி 2016ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிலையில், நில ஆர்ஜிதம் உள்ளிட்ட காரணங்களால் கட்டுமானப் பணி தாமதமானது.
அதே போல், கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே 100 அடி சாலையில் கட்டப்பட்ட மேம்பாலமும் வரும் திங்கட்கிழமை திறந்து வைக்கப்படுகிறது.
94 கோடி ரூபாய் செலவில் 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய மேம்பால பணிகள், அண்மையில் நிறைவடைந்தன.