மருத்துவர்கள் மீதான புகார்களை 6 மாதத்திற்குள் முடிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், இந்திய மருத்துவ கவுன்சில் என்பது தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றப்பட்ட பிறகும், ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான புதிய விதிகள் வகுக்கவில்லை எனத் தெரிவித்தார்.
மருத்துவர்களுக்கு எதிராக புகார் வந்தால் சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் பெற்று, விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை மருத்துவ கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, புகார் தொடர்பான மருத்துவ ஆவணங்களை 3 ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும் என்ற காலவரையறையை 10 ஆண்டுகளாக நீட்டித்தும் உத்தரவிட்டார்.