சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி மற்றும் அவரது மனைவி மீது சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை சுங்கத்துறையில் பணியில் சேர்ந்த முகமது இர்பான் அகமது என்ற அந்த அதிகாரி, விமான உளவுத்துறை பிரிவின் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
கடந்த ஜனவரி 19ஆம் தேதி சென்னையில் இருந்து மனைவியுடன் லக்னோ புறப்பட்ட முகமது இர்பான் அகமதுவை பெங்களூரு விமான நிலையத்தில் பரிசோதனை செய்தபோது, அவரிடம் கணக்கில் வராத 75 லட்ச ரூபாய் பணம் மற்றும் 169 கிராம் தங்கம்,5 விலை உயர்ந்த செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையிலுள்ள அவரது வீட்டிலிருந்தும் பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், பதவி உயர்வுக்குப் பின் முகமது இர்பான் அகமது ஆயிரத்து 851 விழுக்காடு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்தது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.