ஆறு, கால்வாய்களில் தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு பகுதியில் பவானி ஆறு மற்றும் காளிங்கராயன் கால்வாயில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இதன் மீதான விசாரணையின்போது, சட்டவிரோதமாக நீர் எடுக்கப்படுகிறதா என்பதை திடீர் ஆய்வுகள் மூலம் கண்டறிவதாகவும், அவ்வாறு எடுக்கப்பட்டால் குழாய்கள் அகற்றி, மின் இணைப்பும் துண்டிக்கப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஆதாரமாக உள்ள நீரை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கான கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமென அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.