சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் போலி ஆவணம் மூலம் ஒரு கோடியே 90 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜீகாராம் சவுத்ரி கடந்த 2016-ஆம் ஆண்டு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள 3 பிளாட்களுக்கு போலி பத்திரம் தயார் செய்து சுரேஷ் என்பவருக்கு ஒப்பந்தம் செய்வதாக கூறி ஒரு கோடியே 90 லட்ச ரூபாய் வரை முன்பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
பத்திர பதிவு செய்து தராமல் காலம் தாழ்த்தியதாகவும், பணத்தை திருப்பிக் கேட்ட நிலையில் ஜீகாராம் தலைமறைவானதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரில் தலைமறைவாக இருந்த ஜீகாராமை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.