பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் குப்பைக்கிடங்குகளை அமைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைக்கிடங்கு அமைக்கும் முடிவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், வி.பார்த்திபன், P.T.ஆஷா அமர்வு, பூங்கா மற்றும் திறந்தவெளி நிலங்களில் அமைக்கப்படும் குப்பை கிடங்குகள் பயன்படாத நிலைக்கு போய்விடாமல் இருப்பதை, அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர்.