7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், அம்மாணவர்களிடம் ஏற்கனவே கட்டணம் வசூலித்திருந்தால் உடனடியாக திருப்பி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அகில இந்திய தொழிநுட்பக் கல்வி கவுன்சிலான AICTE வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.