விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று அடித்து சித்ரவதை செய்ததில் மரணமடைந்த ஆட்டோ டிரைவரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த கதிரவன் மதுரவாயல் காவல் நிலைய காவலர்கள் சித்ரவதையால் மரணம் அடைந்து விட்டதாக கூறி, அவர் தந்தை தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த இருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.