சென்னை பெசண்ட் நகர் முதல் மெரினா வரை 10 கிலோ மீட்டர் தூரம் கடலில் நீச்சலடித்து 10 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.
கோட்டூர்புரத்தை சேர்ந்த சஞ்சனா என்ற 10 வயது சிறுமி 1 மணி நேரம் 50 நிமிடம் 18 விநாடிகளில், பெசன்ட் நகர் முதல் மெரினா வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்தை, பயிற்சியாளர் உட்பட 4 நீச்சல் வீரர்களின் பாதுகாப்புடன் நீந்தி கரையேறினார்.
சிறுமி சஞ்சனாவை கடற்கரையில் காத்திருந்த ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரன் சந்தன மாலை அணிவித்து வரவேற்றார்.