சென்னைக்கு குடிநீர் வழக்கும் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான, புழல் ஏரி 90 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
அவ்வப்போது பெய்து வரும் மழை மற்றும் கிருஷ்ணா நதிநீர் வருகையால் 21.2 அடி மொத்த உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 19.80அடிக்கு நீர் நிரம்பியுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 260 கன அடி வீதமாக இருக்கும் நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து வினாடிக்கு 179கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எப்போது வேண்டுமானாலும், உபரிநீர் திறக்கப்படும் என்பதால், கால்வாயை சீரமைக்க வேண்டும் எனவும், கரையோரம் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.