சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் புதிதாக 3 பாலங்கள் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை
இறுதி செய்யும் பணியை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.
வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே கணேசபுரத்தில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 வழி மேம்பாலம் கட்டப்படவுள்ளது. அதேபோல், 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திநகர் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை இரண்டு வழி மேம்பாலம் கட்டவும், ஓட்டேரியில் 75 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு வழி மேம்பாலமும் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.