சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அருகே, சட்டவிரோதமாக ஹூக்கா போதை விடுதி இயங்கி வந்திருப்பது, காவல்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அங்கு ஸ்ரீ அக்சரா பில்டிங் என்ற கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் போதை விடுதி செயல்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து நள்ளிரவில் அந்த விடுதியை சோதனை செய்தபோது பலர் போதையில் இருந்துள்ளனர்.
போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்ற, ஊழியர்கள் இருவர் பிடிப்பட்டனர். ஸ்னுக்கர்ஸ் விளையாட்டை நடத்துவதாக கூறி, சட்டவிரோதமாக ஹூக்கா போதை விடுதியை நடத்தி வந்துருப்பது விசாரணையில் தெரியவந்தது. உரிமையாளர் ஃபெரோஸ் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.