சென்னை பெருங்குடி ஏரி மற்றும் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டிய 21 பேருக்கு மொத்தம் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்படி அமைக்கப்பட்ட கூட்டு குழு, பெருங்குடி ஏரியிலும், ஏரியை சுற்றியும் குப்பை கொட்டுபவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விதி 2016-ன் கீழ் அபராதம் விதிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி பெருங்குடி ஏரியில் இரண்டு நாள் ஆய்வு செய்த மாநகராட்சி அலுவலர்கள் ஏரி மற்றும் ஏரியை சுற்றி குப்பை மற்றும் கட்டிட கழிவுகளை கொட்டிய 21 பேருக்கு மொத்தம் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.