நிழல் இல்லா நாளான இன்று சென்னையில் மதியம் 12.13 மணிக்கு பூமியில் நிழல் தெரியாத அதிசயம் நிகழ்ந்தது.
கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் நடுவில் சூரியனின் வட திசைப் பயணத்தில் ஒரு நாளிலும், தென் திசைப் பயணத்தில் ஒரு நாளிலும், உச்சந்தலைக்கு மேலே சரியாக செல்லும்போது, பூமியில் நிழல் தெரியாது. இந்த இரண்டு நாட்களில் கம்பியின் நிழல் அதன் கீழேயே குறுகி விழும்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24ம் தேதியும், ஆகஸ்ட் 18ம் தேதியும் நிழலில்லா நாளை காணமுடியும். அதன்படி இந்த ஆண்டின் இரண்டவது நிழல் இல்லா நாள் சென்னையில் இன்று 12:13 மணியளவில் நிகழ்ந்தது. இந்த நிழலில்லா நாள் செப்டம்பர் 1ம் தேதி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தோன்றி மறையும் என கூறப்பட்டுள்ளது.