சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில், பரஸ்பரம் புகார் கொடுக்க வந்த, இருதரப்பு வழக்கறிஞர்கள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கோட்டூர்புரம் நாயுடு தெரு, 4ஆவது சந்தில் சிமெண்ட் சாலை அமைப்பது தொடர்பாக, தாமஸ் தனசீலன் தரப்பிற்கும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பத்மநாபன் தரப்பிற்கும் தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, இருதரப்பையும் சேர்ந்த வழக்கறிஞர்கள் நிகழ்விடத்திலேயே பிற்பகலில் மோதிக் கொண்ட நிலையில், கோட்டூர்புரம் காவல்நிலையத்திற்கு இருதரப்பினரும் வந்துள்ளனர்.
அப்போது, காவல்நிலைய வளாகத்தில், இரண்டு தரப்பு வழக்கறிஞர்களும் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.