சென்னை திருவான்மியூரில் குடிபோதையில் வாகனத்தை செலுத்தி கர்ப்பிணி பெண் மற்றும் 2 வயது சிறுமி மீது மோதியவரை பொது மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
அடையாறு அருணாச்சலபுரத்தை சேர்ந்த அருண்குமார் மதுபோதையில் வாகனத்தை பின்புறமாக செலுத்தி அருகில் இருந்த இரு சக்கர வாகனம், ஆட்டோட் மீது மோதியதாக கூறப்படுகிறது. மேலும் சாலையில் சென்ற 7 மாத கர்ப்பிணி திருப்பத்தம்மாள் மற்றும் அவரது 2 வயது மகள் ஆகியோர் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கார் கண்ணாடிகளை உடைத்து, அருண்குமாருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.