சென்னை விருகம்பாக்கத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கணவரிடம் OTP எண் பெற்று வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருகம்பாக்கத்தில் வசித்து வரும் மகேஸ்வரி ஐ.ஏ.எஸ். என்பவர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் அன்பழகனை தொடர்புகொண்ட மர்ம நபர், தான் SBI வங்கியில் இருந்து பேசுவதாகவும், கணக்கை புதுப்பிக்க வேண்டும் எனக் கூறியும் OTP எண்ணைப் பெற்று வங்கி கணக்கிலிருந்து பத்தாயிரம் ரூபாயை மோசடி செய்துள்ளனர்.
புகாரின் பேரில் விருகம்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.