சென்னை தியாகராய நகரிலுள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக் கடை பெயரில் போலி ரசீது தயாரித்து 4லட்சம் ரூபாய் மோசடி செய்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
கல்யாண் ஜுவலர்ஸ் நகை கடையில், மாதாந்திர சேமிப்பு நகை சீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் சேரும் வாடிக்கையாளர்களிடம் அங்கு வேலை செய்து வந்த முரளிதரன் என்பவன், பணத்தை வாங்கிக் கொண்டு போலி ரசீதை அச்சடித்து கொடுத்து ஏமாற்றியதோடு, அந்த பணத்தை கணக்கு காட்டாமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.
பணம் கட்டி முடித்தவர்கள் அந்த பணத்திற்கான நகைகளை வந்து கேட்கும் போது, முரளிதரனின் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணக்கு வழக்குகளை சரிபார்த்த போது 4லட்சம் ரூபாய் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.