சென்னையில் 15 வயது சிறுமியை 2 நாட்களாக வீட்டுக்குள் வைத்து மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தனியார் வங்கி செக்யூரிட்டியை போக்சோவில் கைது செய்த போலீசார், 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழ்ப்பாக்கத்தில் குழந்தையை கவனித்துக் கொள்ளும் வேலைக்கு சென்று வந்த அந்த சிறுமி, கடந்த 18-ஆம் தேதி வேலைக்கும் செல்லவில்லை, வீட்டுக்கும் வரவில்லை.
நேற்று வீடு திரும்பிய சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தந்தை சேர்த்துவிட்ட வேலை பிடிக்காமல், ஏற்கனவே குடியிருந்த நுங்கம்பாக்கம் பகுதிக்குச் சென்ற சிறுமி, அங்கு பக்கத்து வீட்டில் குடியிருந்த புருஷோத்தமன் ஜனா என்பவன் வீட்டில் தஞ்சமடைந்து தங்கியிருந்ததாகவும், இதனை சாதகமாக்கிக் கொண்ட புருஷோத்தமன் ஜனா 2 நாட்களாக மிரட்டி சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதும், போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.