சென்னை மயிலாப்பூரில் சாலையின் நடுவே பட்டாசு வாண வேடிக்கையுடன், பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சட்டக் கல்லூரி மாணவர் பரந்தாமன் உள்பட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன், ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லூரியில் தொலைதூர கல்வி வழியில் சட்டம் பயின்று வருகிறார்.
மேலும் சேத்துப்பட்டில் உள்ள கோட்டக் மஹிந்திரா வங்கியின் உதவி மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ வெளியான நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் கொல்லப்பட்ட மயிலாப்பூர் ரவுடி சிவாவின் இடத்தை பிடிக்கும் விதமாக பரந்தாமன் தனது கூட்டாளிகளை சேர்த்து கொண்டு அச்சுறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.