சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனைகளில், பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டு வருகிறது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், அரசு ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் தயார் நிலையில் உள்ள ஆக்சிஜன் ஆலைகள், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு மருத்துவமனையை பொருத்தவரையில், தினசரி சராசரியாக, ஐந்து டன் முதல் எட்டு டன் வரை மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது.
இதன் மூலம், மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜன் மருத்துவமனை வளாகத்திலேயே பூர்த்தி செய்யப்பட்டு, கொரேனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கு தேவையான ஆக்சிஜன் உற்பத்தியை பெற முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்