சிம் கார்டை ரீ சார்ஜ் செய்யவில்லை என்றால் உடனடியாக செயலிழந்து விடும் எனக் கூறி, செல்போனிற்கு லிங்க் ஒன்றை அனுப்பி நூதன முறையில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் எஸ்பிஐ வங்கி கணக்கிலிருந்த 86 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்த 73 வயதான பாலன், சென்னை மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவன். லிங்க் ஒன்றை அனுப்புவதாகவும், அதில் குறைந்தபட்சம் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் சிம்கார்டு புதுப்பிக்கப்படும் என கூறியுள்ளான்.
இதனை நம்பிய பாலன், தனது செல்போனிற்கு வந்த லிங்கிற்குள் சென்று தனது வங்கி கணக்கில் இருந்து 10 ரூபாய் அனுப்பிய சிறிது நேரத்தில், அவரது எஸ்.பி.ஐ வங்கி கணக்கிலிருந்து 86 ஆயிரத்து 500 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
இந்த நூதன கொள்ளை தொடர்பாக அண்ணா நகர் காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.