சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திங்கட் கிழமை முதல் முழு ஊரடங்கு அமலாவதை ஒட்டி, சொந்த ஊர் செல்வோர் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறன்று பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 500ரூபாய் முதல் 1000ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பயணிகள் வரத்து குறைவாகவே இருந்த நிலையில், அவர்களும் அரசு பேருந்தையே நாடிச் சென்றனர். இதனிடையே, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து இணை ஆணையர் ரவிச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.