ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகளை சமூக வலைதளத்தில் வரும் விளம்பரங்களை நம்பி வாங்க முயற்சித்து பணம் கட்டி ஏமாற வேண்டாம் என சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுவரை சென்னையில், ரெம்டெசிவிரை பதுக்கி வைத்திருந்த மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்த 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், கடந்த 14-ம் தேதி கைதான இருவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்து வாங்க இணையத்தில் வரும் அழைப்புகள், விளம்பரத்தை கண்டு பலர் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாறுவதாகவும் நோயாளிகள் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைகளிலேயே உரிய பரிந்துரை படி ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் யாரும் இணையத்தில் வரும் போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.