சென்னையில்,இ-பதிவு செய்து பயணிக்கும் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள கியூஆர் கோடுகளை ஸ்கேன் செய்யும் போது, சில சமயம் போலி என்றும் சில சமயம் ஒரிஜினல் என்றும் காட்டுவதால் நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறையினருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் வாகனங்களை தடுத்து நிறுத்தி இ-பதிவு செய்துள்ளதா என சோதனை செய்தனர், அப்போது ஒரு சில வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள இ-பதிவு கியூ ஆர் கோடுகள் போலி என காட்டின. பிறகு மீண்டும் முயற்சி செய்தால் அத் கோடு ஒரிஜினல் என வந்தது.
இ-பதிவை ஸ்கேன் செய்ய காவல்துறையினர் மொபைல் போனில் தனி ஆப் வைத்துள்ளனர். அதை பயன்படுத்தி ஸ்கேன் செய்யும் போது இப்படி குழப்பமான முடிவுகள் வருவதால், நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாமல் காவல்துறையினர் அனுப்பி விடுவதாக கூறப்படுகிறது.