ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையின் அதிகாரப்பூர்வ முடிவுகள் வருவதற்கு முன்னரே, முடிவுகளை நேரடியாக தெரிவிக்கக்கூடாது என தனியார் ஆய்வகங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தொற்று அறிகுறிகளுடன் RT - PCR பரிசோதனை எடுப்பவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அதன்பின்னர் முடிவுகள் வந்து பரிசோதித்து உடல்நிலைக்கேற்ப சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த நிலையில், தனியார் ஆய்வகங்களில் பரிசோதனை மேற்கொள்பவர்கள், அதன் முடிவை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அரசு மருத்துவமனையை நாடுவதால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இதுபோன்ற நிலையை தவிர்க்க, அதிகாரப்பூர்வமாக முடிவுகள் வரும் வரை நேரடியாக தெரிவிக்கக்கூடாது என மாநகராட்சி அறிவித்துள்ளது.