சென்னையில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனைகளில் 60 விழுக்காடும் தனியார் மருத்துவமனைகளில் 85 விழுக்காடும் படுக்கைகள் நிரம்பியுள்ளன.
சென்னையில் நாள்தோறும் புதிதாக 4000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படும் நிலையில், மூவாயிரத்து அறுநூற்றுக்கு மேற்பட்டோர் குணமடைவதால் படுக்கைகள் கிடைக்கின்றன.
ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஏற்கெனவே 1200 படுக்கைகள் உள்ள நிலையில், புதிதாக 750 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் கொண்ட கட்டடம் 2 நாட்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
ஏற்கெனவே 13 கல்லூரிகள் கொரோனா பராமரிப்பு மையங்களாக உள்ளன.
அத்திப்பட்டில் ஆறாயிரம் படுக்கைகள் கொண்ட கட்டடம் பயன்பாட்டில் உள்ளது. கூடுதலாக கொரோனா பராமரிப்பு மையங்கள் அமைப்பதற்காகக் கல்லூரிகள், அரசு கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.