தன்னையும், தனது குடும்பத்தினரையும் தாக்கி துன்புறுத்தியதாக உதவி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவி சீரியல் நடிகை ஜெனிபர் வலியுறுத்தியுள்ளார்.
வானத்தை போல, செம்பருத்தி உள்ளிட்ட பல தமிழ் சீரியல்களில் துணை நடிகையாக நடித்து வருபவர் மணலியை சேர்ந்த ஜெனிபர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் பேசிய அவர், தான் காதலித்து வந்த உதவி இயக்குனர் நவீன் குமார் என்பவர் தன்னிடம் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டதாகவும், அதனை தர மறுத்ததால் தன்னை அடித்து துன்புறுத்தி மிரட்டியதாகவும் கூறினார்.
உரிய வழக்குப்பதிவு செய்யாததால் கைது செய்யப்பட்ட நவீன்குமார் உள்பட 3 பேரும் தற்போது ஜாமீனில் வந்து, வழக்கை வாபஸ் பெறுமாறு மணலி காவல் ஆய்வாளர் மூலம் மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.