கொரோனா அச்சம் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வர தயங்குவதால் பண்டிகை தினங்களிலும் வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோயம்பேடு சில்லரை விற்பனை சந்தையில் மொத்தமுள்ள ஆயிரத்து 800 கடைகளில் நாள் ஒன்றுக்கு 900 கடைகள் என்றளவில் சுழற்சி முறையில் இயங்கிவருகிறது. இந்நிலையில் கொரோனா அச்சம் மற்றும் மழை காரணமாக கடந்த 3 நாட்களாக விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த இரு வாரங்களாக காய்கறி விலை பெரிய மாற்றமின்றி தொடர்வதாகவும் பீன்ஸ் மட்டும் விலை உயர்ந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி தக்காளி கிலோ 15 ரூபாய்க்கும், பீன்ஸ் கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.