சென்னை வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பைக்கில் வைத்து எடுத்துச் செல்ல முயன்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, அரசு ஊழியர்கள் 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆம் தேதி இரவு வேளச்சேரியில் 3 விவிபேட் இயந்திரம், ஒரு வாக்கு பதிவு இயந்திரத்தை பைக்கில் வைத்து எடுத்துச் செல்ல முயன்ற தேர்தல் பணி ஊழியர்கள் 3 பேரை பொtnதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும், மற்றவை கையிருப்பாக வைத்திருந்ததாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இருப்பினும் விதிகளை மீறியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், ஊழியர்கள் வேளாங்கண்ணி மற்றும் சரவணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இது குறித்து வருகிற 12-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, வாக்கு பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற மூன்று பேர் உட்பட 4 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.