சென்னையில் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 7,098 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.
இந்த மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் விவிபாட் கருவி பரிசோதிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்,
பின்னர் அவை சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.