சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள காவலர்கள் தபால் வாக்கு செலுத்தினர்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேர்தல் நடைபெறுவதால், முதியவர்களிடம் வீட்டுக்கே சென்று தபால் ஓட்டுகளை பெறும் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றன. இதேபோன்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர், அரசு அலுவலர்கள் ஆகியோரும் தபால் ஓட்டுகளை அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு சென்று காவலர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். இதேபோன்று, சேலத்திலும் சுமார் 1700-க்கும் மேற்பட்ட காவலர்கள் தபால் வாக்குகள் செலுத்தினர்.