சென்னையில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்று திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட 7300 பேரின் தபால் வாக்குகள் நாளை முதல் வீடுகளுக்கே சென்று பெறப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தபால் வாக்குச்சீட்டு அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை முதல் 31ம் தேதி வரை தபால் வாக்குகள் வீடுகளுக்கே சென்று பெறப்பட உள்ளது என்றார்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த, வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பதை சோதனை செய்வதற்காக வரும் திங்கள்கிழமை முதல் ஏற்கனவே பணியிலிருந்த 12ஆயிரம் பேர் பணியினை தொடங்க உள்ளதாக பிரகாஷ் தெரிவித்தார்.