சென்னையை அடுத்த ஆவடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை 10 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த வளர்ப்பு தந்தையும், அவரது நண்பரும் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளானூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வளர்ப்பு தந்தை கருணாகரனும், அவரது நண்பர் நாகராஜனும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பொதுமக்கள் சார்பில் போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளது. அப்புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், இருவரையும் போக்சோவில் கைது செய்தனர்.