சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி ரயிலில் கொண்டு வரப்பட்ட 20 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தலை முன்னிட்டு ரயிலில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு பிரிவினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பினாகினி சிறப்பு ரயிலில் நெல்லூரில் இருந்து பயணித்த ஹர்சன்ராமின் உடைமைகளை பரிசோதனை செய்தபோது பணத்தை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.