மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவில்லத்தை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிலம் கையகப்படுத்தியதை எதிர்த்தும், இழப்பீடு தொகை வழங்கப்பட்டதை எதிர்த்தும் வெவ்வேறு வழக்குகள் வெவ்வேறு அமர்வுகளில் விசாரணையில் இருப்பதால், அவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க அரசு தரப்பில் கேட்கப்பட்டது.
அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனி நீதிபதி அமர்வில் உள்ள வழக்கில் உரிய தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு இருதரப்புக்கும் அறிவுறுத்தி அரசின் மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
ஜெயலலிதா நினைவில்லத்தில் மக்களை அனுமதிக்கக் கூடாது என்ற இடைக்கால தடை, தனி நீதிபதியிடம் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை தொடரும் என தெளிவுபடுத்தினர்.