செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே 160 அடி நீளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருக்கழுக்குன்றம் அதிமுக ஏற்பாட்டில் சிற்ப கலைக்கல்லூரி மாணவர்கள் மூலம், 50 டன் மணலை கொண்டு 120 அடி உயர மணல்மேட்டில், 160 நீளத்திற்கு முதலமைச்சரின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மணல் சிற்பமும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மணல் சிற்பமும் உருவாக்கப்படுள்ளது.