விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தூர் வார தடை கோரிய வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆழப்படுத்தி நீர் தேக்கமாக மாற்றினால் அங்குள்ள பல்லுயிரின வளத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், நான்கு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.