சென்னை பல்லாவரம் புத்தேரியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அறிவித்து ஒரு மாதம் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
பல்லாவரம் புத்தேரியில் குப்பைகளை கொட்டிச் செல்வதால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.
அங்கு குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் ஏரியைச் சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என நகராட்சி ஆணையர் மதிவாணன் ஒரு மாதத்துக்கு முன் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது வரை சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
அதுகுறித்து நகராட்சி ஆணையர் மதிவாணனிடம் கேட்டபோது, நாங்களா அங்கு பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுகிறோம் என கோபமாக கேள்வி எழுப்பினார்