சென்னையில் மத்திய அரசு வேலை மற்றும் எம்பி சீட் வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை பிடிக்க சிபிசிஐடி போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்த ஜான் என்பவரிடம் எம்பி சீட் வாங்கி தருவதாக கூறி, மைசூரை சேர்ந்த மகாதேவ் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்துள்ளான். விசாரணையில் கவர்னர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகங்களில் இருந்து இமெயில் அனுப்புவது போல மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கவர்னர் மாளிகைக்கு கொடுத்த புகார், காவல்துறை டிஜிபிக்கு அனுப்பப்பட்டது. டிஜிபி உத்தரவின் பேரிலும் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.