சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
போக்சோவின் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 22 பேர் மீதான குற்றப்பத்திரிக்கையை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இன்னும் 2 தினங்களில் இவ்வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இடைக்கால இழப்பீட்டுத் தொகையினை பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்திற்கு வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.