சென்னை லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ தங்கத்தை கொள்ளை அடித்தவனிடமே கொள்ளை அடிக்க ராஜஸ்தான் ரெளடி காத்திருந்த தகவல், பிடிபட்ட 2 பேர் அளித்த வாக்குமூலம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை குறைந்த விலைக்கு வாங்கியதாக சவுகார்பேட்டையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நகைக் கொள்ளையன் பிரவீன்குமாரை தேடி ராஜஸ்தான் சென்ற சென்னை தனிப்படை போலீசில், அவனது சகோதரர் அவதார் சிங், ரவுடி அனுமன்சிங் பிடிபட்டனர். கொள்ளை அடித்த நகையுடன் ராஜஸ்தான் தப்பி செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் போது, அங்கு பிரவீன்குமாரிடம் இருந்து நகைகளை வழிப்பறி செய்ய திட்டம் தீட்டியிருந்ததாக ரவுடி அனுமன்சிங், தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்