உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 12 லட்சம் பேர் புதிதாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
உலக புற்றுநோய் தினத்தையொட்டி, அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையத்தில் கை அச்சு பிரச்சாரம் என்ற விழிப்புணர்வு இயக்கத்தை இக்குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி துவக்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஆண்டுக்கு ஆண்டு, புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக கவலை தெரிவித்தார்.
புற்று நோய் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து, இந்நிகழ்ச்சியில் தங்கள் அன்பை பகிர்ந்து கொண்டனர்.