சென்னை தேனாம்பேட்டை லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 50 சவரன் தங்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சில நாட்களுக்கு முன், லலிதா ஜுவல்லரியில் நடந்த இந்த கொள்ளை தொடர்பாக அங்கு வேலை செய்து வந்த ராஜஸ்தானை சேர்ந்த பிரவீன் குமார் சிங் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், திருடிய நகைகளில் 50 சவரனை நகைப்பட்டறையில் வேலை செய்யும் தனது நண்பர்களிடம் பிரவீன் குமார் சிங் கொடுத்து உருக்கச் சொன்னது விசாரணையில் தெரியவந்துள்ளது.
50 சவரன் தங்கத்தை பறிமுதல் செய்து நண்பர்கள் 4 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.