தமிழகத்தில் நாளை வரை பனிமூட்டம் காணப்படுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காலை நேரத்தில் ஓரிரு இடங்களில் பனி மூட்டம் காணப்படுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
29 ஆம் தேதி அன்று தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது.