சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்க அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது சட்டவிரோதம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்திடம் விலைக்கு வாங்கிய அதானி குழுமம் அதை 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டம் சட்டவிரோதமானது என்றும், ஆனால் அதன் கட்டுமானத்தை மோடி அரசு உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மோடியின் முதலாளித்துவ நண்பர்களுக்கு நாட்டின் சொத்துக்களை வழங்குவது தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.