சென்னை வடபழனி ஆற்காடு சாலையைச் சீரமைக்கச் சுரண்டிய பின், நீண்ட நாளாகியும் சீரமைக்காததால் வாகன ஓட்டுநர்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆற்காடு சாலையில் வடபழனி முதல் ஆழ்வார் திருநகர் வரை இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்கு மறு உருவாக்கத்துக்காக சாலை ஒரு மாதத்துக்கு முன் சுரண்டப்பட்டது.
ஆனால் சீரமைப்புப் பணிகள் தொடங்காததால் வடபழனி, கோடம்பாக்கம், பூவிருந்தவல்லி, போரூர் ஆகிய பகுதிகளுக்கு இவ்வழியே வாகனங்களில் செல்வோர் கடும் இன்னல் அடைந்து வருகின்றனர்.
சுரண்டப்பட்ட சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது சரியான பிடிமானம் இல்லாததால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.